| ADDED : மார் 18, 2024 04:01 AM
சேலம்: சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரி, தமிழக மேம்பட்ட உற்பத்தி மையம்(டேன்கேம்) இணைந்து தமிழக பொறியியல் துறையில் பெண்களுக்கு ஹேக்கத்தான் போட்டியை நடத்தின. தமிழகத்தில் பொறியியல் துறையில் பெண்களுக்கு ஹேக்கத்தான் போட்டிகள், சேலம், சோனா கல்லுாரியில் நடந்தது. முன்னதாக சோனா கல்வி குழும துணைத்தலைவர் தியாகு தலைமை வகித்தார். சோனா கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.டசால்ட் சிஸ்டம்ஸ், கேட்டியா பிராண்ட் நிறுவன, உலகளாவிய துணைத்தலைவர் பெசன் பிரடெரிக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் பேசினர்.தொடர்ந்து சூரிய சக்தி நகர்புற இயக்கம், மலிவு விலையில் பேரழிவை எதிர்க்கும் வீடு உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. அதில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். முடிவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு முறையே முதல் மூன்று பரிசாக, 1 லட்சம் ரூபாய், 50,000, 30,000 ரூபாய் மட்டுமின்றி, மேலும் முதல், 7 அணிகளுக்கு சிறப்பு பரிசாக, 10,000 ரூபாய் காசோலை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சோனா கல்லுாரி மெக்கானிக்கல் துறைத்தலைவர் செந்தில்குமார், பேராசிரியர் வெங்கடேஷ் ராஜா உள்ளிட்ட பேராசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.