| ADDED : ஆக 12, 2024 06:29 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே வைகுந்தம் பஸ் ஸ்டாப்பில், 'ஜெராக்ஸ்' கடை வைத்துள்ளவர் முரளிதரன், 43. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அப்பகுதிக்கு வந்த, 10ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீற முயன்றார். இதுகுறித்து அச்சிறுமி, பெற்றோரிடம் கூறினார். அங்கு வந்த மாணவியின் பெற்றோர், முரளிதரனிடம் வாக்குவாதம் செய்தனர். பின், சங்ககிரி மகளிர் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தில், முரளிதரனை, போலீசார் கைது செய்தனர்.மற்றொரு சம்பவம்சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி ஜவுளி கடையில் பணிபுரிகிறார். அவர் கடந்த, 8ல் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் புகார்படி ஓமலுார் மகளிர் போலீசார் விசாரித்ததில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கருப்பூர், வெற்றிலைக்காரனுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராகுல், 24, அழைத்துச்சென்றது தெரிந்தது. இதனால் அவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். சிறுமியை ஓமலுாரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.