உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செல்லாத ரூ.500, ரூ.1,000 வைத்திருந்தவர் கைது: ரூ.1 கோடி மதிப்பு நோட்டுகள் பறிமுதல்

செல்லாத ரூ.500, ரூ.1,000 வைத்திருந்தவர் கைது: ரூ.1 கோடி மதிப்பு நோட்டுகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலத்தில் பணமதிப்பிழப்பின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.சேலத்தைச் சேர்ந்த சபீர் பாலாஜி கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனை தான் மாற்றிக் கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடையே பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன் சபீர் மாசி நாயக்கன் பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் 500 ரூபாய் தாள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Muthu Kumar
மே 24, 2024 14:04

பாவம் அவர் என்ன செய்வார் ஆட்சி மாறினால் நோட்டுகள் செல்லும் என்று நினைத்திருப்பார் அது அவர் தவறல்ல


ram
மே 24, 2024 13:53

அதுஎன்னவோ தெரியவில்லை எல்லா குற்ற நடவடிக்கைகளையும் ஒரு அமைதி மார்க்க ஆளுக இருக்கானுக


duruvasar
மே 24, 2024 13:52

இவர் தமிழனா தெலுங்கானா இல்லை திராவிடனா ?


Tiruchanur
மே 24, 2024 12:57

ஒழுங்கா தொழில் செய்து பிழைக்கவே தெரியாது


வாய்மையே வெல்லும்
மே 24, 2024 12:03

பெயரிலேயே தெரியுதே தகிடு தத்த ஆளுன்னு இவிங்களுக்கு தான் அரசியல் வ்யாதிகள் ஸலாம் போட்டு சந்தனம்பூசி மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்


புதிய வீடியோ