உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உழவர் பாதுகாப்பு திட்டம் பயன்பெற அழைப்பு

உழவர் பாதுகாப்பு திட்டம் பயன்பெற அழைப்பு

சங்ககிரி: சங்ககிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயக்குமார் அறிக்கை:முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள், தோட்-டக்கலை, பட்டுப்புழு வளர்ப்போர், பால் பண்ணை, கோழிப்-பண்ணை, கால்நடை வளர்ப்போர், மீன்பிடிப்போர், பயிர், புல், மரம், தோட்ட விளை பொருட்களை வளர்ப்போர், உர வகை பயிர்களை வளர்ப்போர், நிலத்தை மேய்ச்சலுக்கு பயன்படுத்-துவோர் சேர்ந்து பயன் பெறலாம்.இத்திட்டத்தில் இணைபவர்களின் குழந்தைகளுக்கு, தொழிற்-கல்வி, பல்தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் படிப்பு, இளங்கலை, முதுகலை, சட்டம், பொறி-யியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண் கல்வி உள்-ளிட்ட பல்வேறு படிப்புக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம், ஈமச்சடங்கு செலவுக்கு உதவித்-தொகை வழங்கப்படுகிறது.சங்ககிரி தாலுகா விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர், இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விபரங்களுக்கு சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை