உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வறண்டு போகும் கிணறுகள் கொளத்தூர் விவசாயிகள் விரக்தி

வறண்டு போகும் கிணறுகள் கொளத்தூர் விவசாயிகள் விரக்தி

மேட்டூர்:கொளத்துார் வட்டாரத்தில் ஆண்டு சராசரி மழையளவு, 1,091.6 மி.மீ., கடந்த, 2022 - 23ல், 794.8 மி.மீ., மழையே பொழிந்தது. இது சராசரியை விட, 304.8 மி.மீ., குறைவு. இதனால் வறட்சியால் காவிரியில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கொளத்துார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டு போக தொடங்கியுள்ளன.கொளத்துார் வட்டாரத்தில், 40,335 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில், 25,950 ஏக்கர் நிலங்களில் நெல், சோளம், வேர்கடலை, வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வட்டாரத்தில் மொத்தம், 4,000 முதல், 4,200 விவசாய கிணறுகள் உள்ளன. ஒவ்வொன்றும், 25 அடி முதல், 100 அடி ஆழம் கொண்டவை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீரும் குறைந்த நிலையில் பெரும்பாலான விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டுவிட்டன. சில கிணறுகளில், 2 அடி உயரம் மட்டுமே தண்ணீர் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், கிணறுகள் வறண்டதாலும் நடப்பாண்டு கோடைகால பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் பெரும்பாலான விவசாயிகள், நிலங்களை தரிசாக வைத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பின் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டு போக தொடங்கியுள்ளது, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ