உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம், தமிழ்நாடு நில அளவையர் அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட நில அளவையர்கள் சார்பில், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட இணை செயலாளர் தமிழரசன், பொருளாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தநாரி, நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாநில துணைத்தலைவர் முருகேசன் உள்பட பலர் பேசினர். களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர் ஊதியம் உடன்பாட்டை களைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அருள், பிரகாசம், மாவட்ட செயலாளர் முருக பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை