உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லோக்சபா தேர்தல் பணி; அலுவலர்களுக்கு பயிற்சி

லோக்சபா தேர்தல் பணி; அலுவலர்களுக்கு பயிற்சி

சேலம் : சேலம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு, 3,260 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்ற, 13,410 அலுவலர்கள், கூடுதலாக, 2,682 பேர் என, மொத்தம், 16,092 பேர், ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு சட்டசபை தொகுதிகள் முறையே, 11 மையங்களில் நேற்று முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.சேலம், சிக்கனம்பட்டி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பயிற்சி வகுப்பை, தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். குறிப்பாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி ஓட்டுப்பதிவு மையத்தை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ