உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகோகனி, தேக்கு மரக்கன்று முழு மானியத்தில் பெறலாம்

மகோகனி, தேக்கு மரக்கன்று முழு மானியத்தில் பெறலாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்-தப்படுகிறது. அதில் விவசாயம், வனவியல் சம-நிலைப்பட்டு, மண் வளம், நீர் வளம் பாதுகாக்கப்-பட்டு, வணிக ரீதியான மதிப்பு மிக்க மரங்கள் உற்பத்தி செய்யப்படும். அதற்காக வரப்பு ஓரங்களில் நடவு செய்யும் விவ-சாயிகளுக்கு முழு மானியத்தில் மகோகனி, தேக்கு மரக்கன்றுகள், ஹெக்டேருக்கு, 150 எண்-ணிக்கையிலும், வயல் முழுதும் நடவு செய்பவர்-களுக்கு, 500 மரக்கன்றுகளும், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரு ஹெக்டேருக்கு தேவை-யான மரக்கன்றுகளும் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள், அவரவர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவ-லகத்தை தொடர்பு கொண்டு, மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தா-தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை