உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மங்கம்மாள் கோவில் உண்டியல் உடைப்பு

மங்கம்மாள் கோவில் உண்டியல் உடைப்பு

தலைவாசல்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ராஜகோபாலபுரம் மங்கம்மாள் கோவிலை, பூசாரி நிரஞ்சன், நேற்று முன்தினம் இரவு பூட்டிச்சென்றார். நேற்று காலை, 6:00 மணிக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், காணிக்கை பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அத்துடன் உண்டியலை, வெளிப்பகுதியில் வீசிச்சென்றிருந்தனர். கோவிலில் சென்று பார்த்தபோது, வெளிப்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவித்திருந்த தாலி, வெள்ளி கவசம், பித்தளை மணி உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனதும் தெரிந்தது. தர்மகர்த்தா சுப்புராஜ் புகார்படி வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை