உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆணழகன் போட்டி; 200 பேர் பங்கேற்பு

ஆணழகன் போட்டி; 200 பேர் பங்கேற்பு

சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள சந்திர மஹாலில், மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அதில், 55, 60, 65, 70, 75, 80, 85, 85 கிலோவுக்கு மேல், உயரம், குட்டை உள்பட, 13 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர், கட்டுமஸ்தான உடல்களை காட்டினர். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன், தி.மு.க., பகுதி செயலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை