உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல தடை

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல தடை

சேலம் : ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்ட போலீசார், ெஹல்மெட் இன்றி வாகனம் ஓட்ட தடை விதித்தனர். அத்துடன் மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கர வாகனத்தில், 2க்கும் மேற்பட்டோருடன் பயணித்தவர்களை எச்சரித்து, போலீசார் அனுப்பினர். மேலும் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி., உள்ளிட்ட சான்றிதழ் இல்லாத வாகனங்களையும் மலைப்பாதையில் செல்ல அனுமதி மறுத்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் வேறு வழியின்றி ஏற்காடு செல்லாமல், சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் திரும்பிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி