உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமூக இலக்கிய பேரவை சார்பில் நேருவின் 137வது பிறந்தநாள் விழா

சமூக இலக்கிய பேரவை சார்பில் நேருவின் 137வது பிறந்தநாள் விழா

சேலம், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின், 137வது பிறந்த நாளை, தேசிய சமூக இலக்கிய பேரவை கொண்டாடியது.சேலம் சங்கீத் தியேட்டர் எதிரில் உள்ள, நேரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் பொறியாளர் திருமுருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் சஞ்சய்காந்தி வரவேற்று பேசினார். மனம் மாமன்ற தலைவர் டாக்டர். பன்னீர்செல்வம், வரலாற்று சங்கத்தலைவர் பர்னபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.தேசிய சமூக இலக்கிய பேரவை மாநில தலைவர் தாரை.குமரவேலு பேசுகையில்,'' நேருவும் - இந்தியாவும்' என்ற தலைப்பில் பேசினார். இந்திய விடுதலைக்கு பின் புதிய பாரதத்தை உருவாக்கினார். அதுமட்டுமின்றி உலக நாடுகாள் ஒற்றுமையாக பாதுகாப்புடன் வாழ, அணிசேரா நாடுகள் என்ற அமைப்பையும், அதன்வழி பஞ்சசீல கொள்கையும் வகுத்து, உலக புகழ்பெற்று விளங்கி பாரதத்துக்கு பெருமை சேர்த்தார்.இந்தியா இன்றைக்கும் மக்கள் வாக்களித்து குடியரசு ஆட்சி அமைக்கும், சமதர்ம ஜனநாயக கொள்கைக்கு அடித்தளமிட்ட பெரும் தலைவர் நேரு,'' என்றார். யுவராஜ், குகன், மான் பாண்டியன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி