உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேவர் சிலைக்கு கட்சியினர் மரியாதை

தேவர் சிலைக்கு கட்சியினர் மரியாதை

சேலம், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 118வது பிறந்த தினத்தை ஒட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை, மாதவராயன் தெருவில் உள்ள அவரது சிலைக்கு, நேற்று, தி.மு.க., சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர செயலர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். காங்., சார்பில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜகணபதி தலைமையில் கட்சியினர், மரியாதை செலுத்தினர்.பா.ஜ., சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.பா.ம.க., சார்பில் தலைவர் அன்புமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோரும், ராமதாஸ் அணி சார்பில், எம்.எல்.ஏ., அருள், மாவட்ட செயலர் கதிர் ராசரத்தினம் உள்ளிட்டோரும், மாலை அணிவித்தனர். த.வெ.க., சார்பில் மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமையில் கட்சியினர், மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை