உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போட்டோ - ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

போட்டோ - ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில், 10 அம்ச கோரிக்கையை வலியு-றுத்தி, போட்டோ - ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று மாலை நடந்தது. மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்-பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலு-வலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் சிவக்குமார் பேசினார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; கருணை பணி நிய-மனத்தில், 5 சதவீதத்துக்கு மேல் நியமனம் கூடாது என்ற உச்ச வரம்பை ரத்து செய்தல்; அனைத்து துறைகளில் உள்ள காலி இடத்தை பூர்த்தி செய்து, பதவி உயர்வு அளித்தல்; சிறப்பு கால-முறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி, பகுதி நேர பணியாளர்கள் என, அனைவரது எதிர்கால நலன் கருதி, பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குதல் உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வா-கிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி