உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீசாரை தாக்கியவர் மிரட்டியவருக்கு காப்பு

போலீசாரை தாக்கியவர் மிரட்டியவருக்கு காப்பு

இடைப்பாடி, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷ னில் ஏட்டாக பணிபுரிபவர் சாகித், 33. இவர், வழக்கு விசாரணைக்காக கடந்த, 5ல், லட்சுமணகவுண்டனுார் பகுதிக்கு சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த வேல்மணி, 27, அவரது தந்தை கந்தசாமி, 66, ஆகியோர், சாகித்திடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது, வேல்மணி ஏட்டு கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து ஏட்டு நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இடைப்பாடி போலீசார், நேற்று வேல்மணியை கைது செய்தனர்.முன்னதாக இந்த விவகாரத்தில், வேல்மணிக்கு அவரது மாமா காவேரி, 48, அடைக்கலம் கொடுத்திருப்பதாக, எஸ்.ஐ., சீதாவுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து இடைப்பாடி - பூலாம்பட்டி சாலையில் உள்ள தாபாவில் இருப்பதாக தெரிந்து, எஸ்.ஐ., அங்கு சென்றார். அப்போது காவேரி, ஆபாசமாக பேசி திட்டியதோடு, கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து எஸ்.ஐ., சீதா புகார்படி, இடைப்பாடி போலீசார், காவேரியையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை