வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு
சேலம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு, எல்.ஐ.சி., காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் இணைந்து, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி, சேலம், கோட்டை கனரா வங்கி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சம்பத் தலைமை வகித்தார்.அதில், எல்.ஐ.சி., பங்கை தனியாருக்கு விற்கக்கூடாது; காப்பீடு துறையில், 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும்; பொதுத்துறை வங்கிகள், காப்பீடு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்புதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுத்தல்; காப்பீடு தொகைக்கு ஜி.எஸ்.டி., வரி ரத்து செய்தல்; தொழிலாளர் நல சட்டத்தை, 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டதை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஊழியர் சங்க பொதுச்செயலர் ஆனந்த கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.