உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலவரம் நடந்த தீவட்டிப்பட்டியில் போலீஸ் அவுட் போஸ்ட் கட்ட பூஜை

கலவரம் நடந்த தீவட்டிப்பட்டியில் போலீஸ் அவுட் போஸ்ட் கட்ட பூஜை

ஓமலுார்: கலவரம் நடைபெற்ற தீவட்டிபட்டியில், புதிய போலீஸ் 'அவுட் போஸ்ட்' கட்ட பூமி பூஜை நடந்தது.காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டியில், 2024 மே 2ல், தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பண்டிகையில், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் வழிபாடு நடத்த வேண்டும் என, வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலவரமாக மாறி, பெட்ரோல் குண்டு வீசியதில், தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை, நகைக்கடை தீயில் கருகியது. பல கடைகள் அடித்து சேதமாக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இவ்வழக்கில் இருதரப்பிலும், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து முக்கிய இடங்களில், 32 காண்காணிப்பு கேம-ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, போலீசார் சார்பில் அங்கு புதிய 'அவுட் போஸ்ட்' அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில்,'' கலவரம் நடந்த பகுதி மற்றும் கோவில் உள்ளிட்ட தீவட்டிப்பட்டி முழுவதும், முக்கிய இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஸ்டேஷனில் இருந்து கண்காணிப்படுகிறது. தீவட்டிப்பட்டியில் புதிதாக போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து, அங்கு போலீசார் அமர்த்தப்பட்டு, மிகப்பெரிய 'டிவி'யில் அனைத்து கேமராக்களின் இணைப்பு வழங்கப்பட்டு, தீவிர கட்-டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி