உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாநகரில் சிறந்த கல்வி நிறுவன விருது அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு வழங்கல்

சேலம் மாநகரில் சிறந்த கல்வி நிறுவன விருது அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு வழங்கல்

சேலம்: சேலத்தை சேர்ந்த, 'மிட்டவுன் ஈவன்ட்' நிறுவனம், கல்வி, வர்த்தகத்தில் சிறந்து விளங்குவோரை அங்கீகரித்து ஊக்குவிக்க, 'மிட்டவுன் வர்த்தக விருதுகள்' நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, 'சேலம் மாநகரில் சிறந்த கல்வி நிறுவனம்' விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை, 'ட்ரூ சாய்' அமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபு வழங்கினார்.இதுகுறித்து அத்துறை டீன் செந்தில்குமார் கூறுகையில், ''கல்வி சார்ந்த மேம்பாடு, புது முயற்சி, அதன் செயல்பாடுகளை வைத்து, பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே நடத்திய ஓட்டெடுப்பில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புது தொழில்நுட்ப முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள உந்துதலாக அமைந்துள்ளது,'' என்றார்.மேலும் விருதுக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய டீனை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ