உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குண்டுமல்லி கிலோ ரூ.1,200 ஆக விலை உயர்வு

குண்டுமல்லி கிலோ ரூ.1,200 ஆக விலை உயர்வு

சேலம்;சேலம் மாவட்டத்தில் சாகுபடி செய்யும் பூக்கள், வ.உ.சி., மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள், பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் அனுப்புகின்றனர். கடந்த வாரம் முகூர்த்தம், கோவில் திருவிழா இல்லாததால், பூக்கள் விலை குறைவாக இருந்தது. குறிப்பாக குண்டுமல்லி, நேற்று முன்தினம் வரை, கிலோ, 600 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், பனியால் குண்டுமல்லி வரத்து குறைந்தது. அத்துடன் இன்று முகூர்த்தம், நாளை கார்த்திகை பிறப்பால், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கேற்ப, நேற்று குண்டுமல்லி கிலோ, தரத்துக்கேற்ப, 1,200 ரூபாய் வரை உயர்ந்தது. ஜாதிமல்லி, 480, காக்கட்டான், 240, அரளி, 240, நந்தியாவட்டம், 200, சம்பங்கி, 100 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்