உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஓமலுார்: ஊரக பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், சேலம் மாவட்டம் காமலாபுரம், பொட்டியபுரம் ஆகிய கிராமங்களுக்கு, காமலாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்தது.கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில், பல்வேறு துறைகள் சார்ந்து, 51 பயனாளிகளுக்கு, 13.63 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 942 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 51 மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது.முன்னதாக அமைச்சர் நேரு பேசுகையில், ''இன்றைய முகாமுக்கு, 2,000 பேர் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்படும். தமிழகத்தில் இன்று(நேற்று) மட்டும், 2,400 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது,'' என்றார்.அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பா.ம.க.,வின் எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை