| ADDED : நவ 18, 2025 01:45 AM
ஆத்துார், ஆத்துாரில், நள்ளிரவில் நீரோடையில் பைக்குடன் விழுந்த தனியார் பஸ் டிரைவர் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வினோத், 33. தனியார் பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் தெற்குகாடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, 'பஜாஜ் - பல்சர்' பைக்கில் சென்றுள்ளார்.நள்ளிரவு, 12:30 மணியளவில் வீட்டில் இருந்து பைக்கில் வேகமாக சென்ற நிலையில், சாலையோர நீரோடையில் பைக்குடன் கழிவுநீர் பகுதியில் விழுந்துள்ளார். தலை பகுதியில் அதிகளவில் காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.நேற்று காலை, 6:30 மணியளவில், அவ்வழியாக நடை பயிற்சி சென்றவர்கள், பைக்குடன் நீரோடையில் விழுந்து இறந்த நபர் குறித்து, ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின், ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார், இறந்த டிரைவர் வினோத் உடலை மீட்டனர்.இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசார், தனியார் பஸ் டிரைவர் நீரோடையில் விழுந்து இறந்த சம்பவத்தில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.