உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனம் மோதி தனியார் ஊழியர் பலி

சரக்கு வாகனம் மோதி தனியார் ஊழியர் பலி

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், செக்கடிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 32. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பவித்ரா, 30. இருவரும் நேற்று மதியம், 12:50 மணிக்கு, 'யுனிகான்' பைக்கில் ஏத்தாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல், அன்பழகன் ஓட்டினார்.படையாச்சியூர் அருகே சென்றபோது, எதிரே, கொட்டவாடியை சேர்ந்த மோகன்ராஜ், 27, ஓட்டி வந்த சரக்கு வாகனம், பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த அன்பழகன், பவித்ராவை, மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.வழியில் அன்பழகன் உயிரிழந்தார். பவித்ரா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார், சரக்கு வாகன டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ