உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்

சேலம் : சேலம் கோட்டை மைதானத்தில், இ.கம்யூ., கட்சியின் மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் சார்பில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலர் வேல்முருகன் தலைமை வகித்தார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஒதுக்கீட்டை ஆண்டுக்கு, 2.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி வழங்குதல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியை, 7 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷச்சாராயத்தில், 60 பேர் பலியான சம்பவத்துக்கு, தமிழக அரசு பொறுப்பேற்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன், மாநிலக்குழு உறுப்பினர் அய்யந்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி