| ADDED : டிச 31, 2025 05:23 AM
தாரமங்கலம்:தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 52. இவரது மகள் பிரியங்கா. இவர், 2012ல் பிளஸ் 2 முடித்துவிட்டு, மருத்-துவம் படிக்க தயாராகிக்கொண்டிருந்தார். அப்-போது தர்மபுரி ஆசிரியர் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன், சென்னையில் பிரியங்காவுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பிய கோவிந்தராஜன், 2012 ஜூனில் இரு தவணையாக, 70 லட்சம் ரூபாயை, ராஜேஸ்வர-னிடம் கொடுத்தார். பின் ராஜேஸ்வரன், மருத்-துவ சீட் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்தார். தொடர்ந்து ராஜேஸ்வரன், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர், கோவிந்த-ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் புகார்படி தாரமங்கலம் போலீசார் கடந்த, 12ல் தம்பதி மீது வழக்குப்பதிந்தனர்.ஆனால் ராஜேஸ்வரனை வேறு வழக்கில் ஓமலுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், 70 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், நீதி மன்றத்தில் உத்த-ரவு பெற்று, ராஜேஸ்வரனை தாரமங்கலம் போலீசார் விசாரணைக்கு, நேற்று ஸ்டேஷ-னுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரித்த பின், மாலை ராஜேஸ்வரனை சிறைக்கு அழைத்-துச்சென்றனர்.