உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயர்த்திய அரசு பஸ் கட்டணம் குறைப்பு

உயர்த்திய அரசு பஸ் கட்டணம் குறைப்பு

சேலம்:அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையேயும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும், 1,120 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்கான கட்டண உயர்வை, அரசே நிர்ணயம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு, அமல்படுத்துவது வழக்கம்.ஆனால், அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் சில்லரை பிரச்னையை காரணம் காட்டி, பொங்கல் முதல் பஸ்களின் கட்டணத்தை, 5 முதல், 30 ரூபாய் வரை உயர்த்தினர்.இது குறித்து, நம் நாளிதழில் கடந்த, 19ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைத்து, பழைய கட்டணத்தை வசூலிக்க கண்டக்டர்களுக்கு கிளை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, சென்னை உட்பட தமிழகம் முழுதும் நேற்று முதல், பழைய கட்டணம் அமல்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ