உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.80 ஆயிரம் வழிப்பறி சிக்கிய மூவருக்கு காப்பு

ரூ.80 ஆயிரம் வழிப்பறி சிக்கிய மூவருக்கு காப்பு

சேலம்,: சேலம் அழகாபுரம், நாகம்மாள் தோட்டம், மார்க்கபந்து தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார், 56. இவர், 4 ரோடு அருகே பீடா ஸ்டால் வைத்துள்ளார். இவருக்கு ஏற்கனவே அறிமுகமான மணிகண்டன் என்பவர், நேற்று காலை, 9:00 மணியளவில் மொபைலில் தொடர்பு கொண்டு, 5 ரோடு ஜவுளிக்கடை அருகே நின்றிருப்பதாகவும், நான் தேடும் முகவரி தெரியாத காரணத்தால், நேரில் வரும்படி அழைத்துள்ளார்.அதை கேட்ட மனோஜ்குமார், பீடா ஸ்டாலுக்கு தேவையான சரக்குகள் வாங்கும் அவசரத்தில், 80,500 ரூபாயை எடுத்து கொண்டு, ஜவுளிக்கடை எதிரே பாலத்துக்கு அடியில் சென்றுள்ளார். அங்கு கூட்டாளிகள் இருவருடன் நின்றிருந்த மணிகண்டன், கத்தியை காட்டி மிரட்டி, மனோஜ்குமாரிடம் இருந்த, 80,500 ரூபாயை பறித்து கொண்டதோடு, வெளியே சொன்னால் கொன்று விடுவதாக எச்சரித்துவிட்டு மூவரும் தப்பினர்.பீடா ஸ்டால் உரிமையாளர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் வழக்குபதிந்து, தர்மபுரி மாவட்டம், நாகோஷிணஹள்ளியை சேர்ந்த மணிகண்டன், 36, அவருடைய கூட்டாளிகள் மேட்டூர் தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்த கவுதம், 37, மேச்சேரி காளிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன், 33, ஆகிய மூவரையும் கைது செய்து, வழிப்பறி செய்த பணத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை