மேலும் செய்திகள்
ரவுடி கொலையில் நால்வருக்கு 'கஸ்டடி'
16-Apr-2025
ஆத்துார்:அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, சென்னையில் இரட்டைக் கொலையில் கைதாகி சிறையில் உள்ள ரவுடியை, 'கஸ்டடி' எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வடசென்னிமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆத்துார் அரசு கல்லுாரி முதல்வரான இவர், குடும்பத்தினருடன் வெளியூர் சென்றபோது, ஜன., 24ல், இவரது வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.ஆத்துார் ஊரக போலீசார் விசாரணை நடத்தினர். நகை திருட்டில் ஆறு பேர் ஈடுபட்டது தெரியவந்தது. பிப்., 5ல், ஆத்துாரை சேர்ந்த சதாசிவம், 41, பெரம்பலுார், சிறுநிலாவை சேர்ந்த ரஞ்சித்குமார், சிவகுமார், 37, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூவரை, தனிப்படை போலீசார் தேடினர். இதில், முக்கிய குற்றவாளியில் ஒருவரான, திருச்சி, திருவெறும்பூரைச் சேர்ந்த தினேஷ்குமார், 32, கொலை வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் இருந்தார். அவர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.சென்னையில் மார்ச் 16ல் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைதான ரவுடி, 'சுக்கு காபி' சுரேஷ், 26, என்பவர் தலைமையில், இந்த கொள்ளை நடந்தது தெரியவந்தது. புழல் சிறையில் இருந்த இவரை, நேற்று முன்தினம் ஆத்துார் தனிப்படை போலீசார், 'கஸ்டடி' எடுத்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் வசித்து வந்த சுக்குகாபி சுரேஷ், கஞ்சா போதைக்கு அடிமையாகி, 2018 முதல் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். சுரேஷ் பெயரில் பல ரவுடிகள் இருந்ததால், சுக்கு காபி விரும்பி அருந்தி வந்த சுரேஷுக்கு, போலீசார், 'சுக்கு காபி' சுரேஷ் என்ற அடைமொழி பெயர் வைத்துள்ளனர்.
16-Apr-2025