உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மளிகை கடையில் ரூ.80,000 திருட்டு

மளிகை கடையில் ரூ.80,000 திருட்டு

சேலம்: சேலம், கோட்டை ஹபிப் தெருவை சேர்ந்தவர் முகமது ரபி, 36. இவர், டவுன் வரதப்பன் தெருவில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டரின் கதவு ஒரு புறம் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில், டிராவில் இருந்த, 80,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் கோட்டையில் உம்ராபானுவில், தையல் கடை ஷட்-டரும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் திருடுபோக-வில்லை. இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ