உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேசிய வேலை உறுதி திட்ட பணியில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை

தேசிய வேலை உறுதி திட்ட பணியில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை

பனமரத்துப்பட்டி : தேர்தலை மனதில் வைத்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் சலுகை காட்டுவதால், வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது அம்பலமாகி உள்ளது. மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில், அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி குளறுபடிகளை கண்டுபிடிக்க வேண்டும்.கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. யூனியன் பொறியாளர்கள் நிர்ணயம் செய்த அளவுபடி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கும் பணிக்கு, அதிகபட்சமாக ஒருவருக்கு, 119 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், கிராமத்தில் உள்ள ஏரிகள், ஓடை, ராஜவாய்க்கால், மண் சாலை உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், சிறிது நேரம் வேலை செய்துவிட்டு, மரத்தடியில் தூங்கி மாலையில் வீடு திரும்புவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.உடல் உழைப்பு திறன் கொண்டவர்களுக்கு மட்டும் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால், வேலை ஏதும் செய்ய முடியாத மிகவும் வயதான பலருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உழைத்து சாம்பதித்து சாப்பிட முடியாது என சான்று பெற்று, மாதந்திர உதவித்தொகை, 1,000 ரூபாய் பெற்று வரும் பலர், இந்த வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், வரும் உள்ளாட்சி தேர்தலில், தொழிலாளர்களின் குடும்பத்தினரின் மொத்த ஓட்டுகளை பெற, தகுதி இல்லாத பலருக்கு அடையாள அட்டை கிடைக்கும்படி செய்துள்ளனர். தற்போது பதவியில் உள்ள பஞ்., தலைவர்கள், வேலை நடக்கும் இடத்தில் தொழிலாளர்களிடம் ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.பல இடங்களில், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, வேலை செய்யாமல், சம்பளம் மட்டும் வாங்கிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக, கடந்த 9ம் தேதி, சேலம் அடுத்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்தில், தொழிலாளர்கள், 10 பேர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வேலை செய்யாமல் சென்றனர்.இதை கண்டுபிடித்த பனமரத்துப்பட்டி பி.டி.ஒ.,மல்லிகேஸ்வரி,10 தொழிலாளர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்டுவிட்டு, அவர்களின் அடையாள அட்டையை எடுத்துச் சென்றார். இது போன்று அனைத்து பஞ்சாயத்துகளிலும், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி பி.டி.ஓ., மல்லிகேஸ்வரி கூறியதாவது:வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வேலை செய்யாமல் சென்ற தொழிலாளர்கள், 10 பேருக்கு இரண்டு நாள் சம்பளம் இல்லை. கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மக்கள் நல பணியாளர் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை