உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரோட்டோரத்தில் பதுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

ரோட்டோரத்தில் பதுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

சேலம் : வாழப்பாடி அருகே பேளூர் மெயின் ரோட்டில், 11 அடி நீள ஆண் மலைப்பாம்பு பிடிபட்டது. வாழப்பாடி, பேளூர் ஈஸ்வரன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெரிய மலைப்பாம்பு ஒன்று, ரோட்டோரத்தில் சுருண்டு கிடந்ததை அந்த வழியே சென்ற சிலர் பார்த்துள்ளனர். அவர்கள், வாழப்பாடி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வாழப்பாடி வனத்துறையை சேர்ந்தவர்கள், பாம்புகளை பிடிக்கும் குழுவுக்கு தகவல் அளித்தனர்.பாம்பு பிடிப்பதில் தேர்ச்சி பெற்றவர்களான முருகன், சிவா, லாரா, தினேஷ், விஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுருண்டு கிடந்த மலைப்பாம்பை, லாவகமாக பிடித்து சேலம் வனத்துறை அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தெற்கு வனச்சரகர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், வனகாப்பாளர் சாமிராஜன், வன காவலர் நாசினி ஆகியோர் மலைப்பாம்பை பார்வையிட்டனர்.இது குறித்து பாம்பு பிடிக்கும் முருகன் கூறியதாவது:பேளூர் ஈஸ்வரன் கோவில் மெயின் ரோடு ஓரத்தில் சுருண்டு கிடந்த மலைப்பாம்பை, நேற்று முன்தினம் இரவு பிடித்தோம். இந்த பாம்பு, 11 அடி நீளமுடையது. இரண்டு வயதிருக்கும். பொதுவாக மலைப்பாம்புகள், 20 அடி வரை நீளம் வளரக்கூடியவை. பிடிப்பட்ட மலைப்பாம்பு, 15 அடி வளர்ந்துவிட்டால், ஆளையே விழுங்கும் வகையில், அதன் வாய் அகலமாகிவிடும். பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம், சேலத்தில் பாம்புகளை கொல்வது குறைந்துவிட்டது. பாம்பை கண்டால், பலரும் வனத்துறை அலுவலகத்துக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவிக்கின்றனர். பிடிபட்ட மலைப்பாம்பு சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை