மான் கறி சமைக்க முயன்ற 8 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்வாழப்பாடி: வாழப்பாடி, அருநுாற்றுமலை அருகே, சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டதாக, ஆத்துார் கோட்ட வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.இதனால் ஆலடிப்பட்டியில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, அங்குள்ள ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகியோர், மான் கறியை சமைக்க முயன்றது தெரிந்தது. விசாரித்ததில் நாய்கள் புள்ளிமானை துரத்தி கடித்தன. அதில் பெலாப்பாடி, காப்புக்காடு ஒட்டிய ஓடையில் காயம் அடைந்த நிலையில் கிடந்த புள்ளிமானை, சமைத்து சாப்பிட முயன்றதும் தெரிந்தது.இதனால் ஆத்துார் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், 8 பேரையும் எச்சரித்து, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.மேலும் ஆலடிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், வனவிலங்கு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஊராட்சி சலுகை வழங்கப்படாது என எச்சரிக்கப்பட்டது.பி.டி., ரக பருத்திவிலை அதிகரிப்புஇடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.ஏராளமான விவசாயிகள், 650 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 7,669 முதல், 8,099 ரூபாய் வரை விலைபோனது.இந்த ரகம், கடந்த வாரம், 6,400 ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த வாரம், 1,269 ரூபாய் உயர்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆடுகள் விற்பனைகொங்கணாபுரம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள வாரச்சந்தைக்கு நேற்று ஏராளமானோர், 3,950 ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 6,250 முதல், 6,650 ரூபாய் வரை விலைபோனது.செம்மறியாடு, 6,200 முதல், 6,600 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.45 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.