| ADDED : ஜூன் 18, 2024 07:10 AM
சேலம் : சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் இருந்து, ஆண்டகலுார் கேட் வரை நேற்று, 12 சிறுவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். எந்தவித அனுமதியும் இன்றி, ஆபத்தை உணராத சிறுவர்கள் சாலை விதி மீறி, பயிற்சியில் ஈடுபட்டது, அவ்வழியே சென்ற, 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம், வாட்ஸ் ஆப்பில் வைரலானது. இது தொடர்பாக மல்லுார் போலீசார் விசாரணை நடத்தினர். அதையடுத்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமரமங்கலம் பாலாஜி நகரை சேர்ந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபாகரன், 29, மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.