உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வருக்கு தபால் அனுப்பி சிறப்பு பயிற்றுனர்கள் போராட்டம்

முதல்வருக்கு தபால் அனுப்பி சிறப்பு பயிற்றுனர்கள் போராட்டம்

சேலம்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கம் சார்பில், சேலத்தில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்-தது. மாவட்ட தலைவர் குருவாயூரப்பன் தலைமையில் நிர்வா-கிகள், உறுப்பினர்கள், காலை, 11:30 மணிக்கு, பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகம் முன் திரண்டனர். அங்கு சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் தனித்-தனியே, 3 அம்ச கோரிக்கைகள் அச்சிட்ட படிவத்தை பூர்த்தி செய்து, அதை பதிவு தபாலில் முதல்வருக்கு அனுப்பி, போராட்-டத்தை வெளிப்படுத்தினர்.இதுகுறித்து குருவாயூரப்பன் கூறியதாவது: பள்ளி கல்வித்து-றையில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 1.12 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பொருத்தமான கல்வி போதிக்கும் பணியில், கல்வியியல் பட்டம் மற்றும் பட்டையம் படித்த, 1,600 சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், 350 பேர் பணிபுரிகிறோம். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, 5 சதவீத ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்தல், தொழிலாளர் வைப்புநிதி பிடித்தம் செய்ய கேட்டு, முதல்வருக்கு தபால் அனுப்பி வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ