உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில் வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு

எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில் வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு

சேலம், சேலம், கருப்பூர் அருகே கரும்பாலை எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில், 25ம் ஆண்டு கல்வி சேவை வெள்ளி விழாவையொட்டி, சிறப்பு மலர் வெளியீடு, 25ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.அதில் பெற்றோர், மாணவ, மாணவியர் முன்னிலையில், வெள்ளி விழா சிறப்பு மலரை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட, சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயன், அமைச்சர் ராஜேந்திரன் பேசினர்.முன்னதாக அமைச்சர் ராஜேந்திரன், அதிகாரிகள் ரவிக்குமார், மகேஸ்வரி, விஜயன் ஆகியோருக்கு, பள்ளி நிர்வாக தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர், பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினர். மழலையர் தலைமை ஆசிரியை அமுதா, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை