உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம், திருநெல்வேலி - ஷிமோகா டவுன் சிறப்பு ரயில், இன்று மாலை, 4:20க்கு புறப்பட்டு, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், குப்பம், பங்காருப்பேட்டை, பெங்களூரு வழியே நாளை மதியம், 1:00 மணிக்கு ஷிமோகா டவுனை அடையும். நள்ளிரவு, 12:50க்கு சேலம் வந்து செல்லும்.மறுமார்க்க ரயில், நாளை மதியம், 2:20க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 10:45க்கு நெல்லையை அடையும். நள்ளிரவு, 1:00 மணிக்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை