| ADDED : ஜன 27, 2024 04:24 AM
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து, அங்கு பணிபுரியும் கூலி போர்டர், உணவு சப்ளையர், வென்டர், துாய்மை பணியாளர், ஆட்டோ, டாக்சி டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினர். அதற்கு தலைமை வகித்து ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சவ்ரவ்குமார் பேசியதாவது:சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவுகிறீர்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். அதேபோல் பயணியருக்கு உரிய பாதுகாப்பு, உதவி செய்ய, போலீசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஸ்டேஷனில் சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்கள் குறித்து தெரியவந்தால், உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில்கள், ஸ்டேஷன்களில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.