உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்பி மனைவியின் ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

தம்பி மனைவியின் ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

சேலம்: சேலம், கோட்டை, மேல் மக்கான் தெருவை சேர்ந்த, 46 வயதுடையவர், கடந்த டிசம்பரில், சின்ன கொல்லப்பட்டியில் உள்ள தம்பி வீட்டில் தங்கினார். அப்போது தம்பியின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதற்கு அவர் ஒத்துழைக்காததால், அவரது அங்க அசைவுகளை படம் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண், துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் புகார்படி கன்னங்குறிச்சி போலீசார், 46 வயதுடையவர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை