உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரு முருங்கைக்காய் ரூ.30 ஆக உயர்வு

ஒரு முருங்கைக்காய் ரூ.30 ஆக உயர்வு

பனமரத்துப்பட்டி, சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய வயல், வரப்பு, தோப்பு பகுதிகளில் முருங்கைக்காய் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை, முன்கூட்டியே பனிப்பொழிவு தொடங்கியதால், முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைந்துள்ளது.]இதுகுறித்து பனமரத்துப்பட்டியை சேர்ந்த உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் பருவ நிலை மாறி, முருங்கை உற்பத்தி குறைந்துள்ளது. தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு தினமும், 50 கிலோ முருங்கை மட்டும் விற்பனைக்கு வருகிறது. வரத்து சரிவால், இரு நாட்களாக ஒரு கிலோ, 300 ரூபாய், ஒரு காய், 30 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் கிலோ முருங்கை, 600 ரூபாய் வரை விற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி