பனமரத்துப்பட்டி: மழைநீர், கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அரசியல்வா-திகள், அதிகாரிகள் வந்து பார்த்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை என, பாதிக்கப்பட்ட மக்கள் புலம்புகின்றனர்.சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து கழி-வுநீர், 11வது வார்டு தாசிக்காட்டில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் உள்ள குட்டையில் தேங்கியுள்ளது. அப்பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழையால், கழிவுநீர் கலந்த தண்ணீர், பக்கத்தில் உள்ள பெரமனுார் ஊராட்சியில் புகுந்தது. அங்குள்ள வாத்திக்காடு, மானியக்காடு, பெரமனுார் உள்ளிட்ட இடங்களில், வீடுகளை சூழ்ந்தது. 50 ஏக்கர் விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி பயிர் சேதம் ஏற்பட்டது. விளைநிலங்களிலும் நீருற்று உற்-பத்தியாகி, பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது.இதுகுறித்து, பெரமனுார் மக்கள், விவசாயிகள் கூறியதாவது:மழைநீர், கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய அதிகா-ரிகள், வருவாய், தோட்டக்கலை, வேளாண் அதிகாரிகள் பார்வை-யிட்டனர். மழைநீர், கழிவுநீரை, மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இது-வரை எதுவும் செய்யவில்லை. கழிவுநீர் வந்தபடியே உள்ளது. வயலில் ஒரு அடி தோண்டினாலும் நீரூற்றும் வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.டவுன் பஞ்சாயத்து, தி.மு.க., கவுன்சிலர் ரவிக்குமார் கூறு-கையில், ''சந்தைப்பேட்டையில் இருந்து சாலையோரம் மழைநீர் வடிகால் அமைத்து, ஏரியில் விட வேண்டும். டவுன் பஞ்சாயத்து எல்லை வரை வடிகால் அமைக்க, 2.10 கோடி ரூபாய்க்கு முன்-மொழிவு தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு மேல், பள்ளிதெருப்பட்டி, பெரமனுார் ஊராட்சி நிர்வாகம், மழைநீர் வடிகால் பணியை, ஏரி வரை செய்து முடிக்க வேண்டும். அதற்கு, பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'டவுன் பஞ்சாயத்து எல்லை வரை, மாற்றுப்பாதையில் மழைநீர் வடிகால் அமைத்தால், பெரமனுார், பள்ளிதெருப்பட்டி எல்லைக்குள் தண்ணீர் வராது. அதை மீறி வந்தால், இரு ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்துக்கொள்ளலாம்' என்றனர்.