உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி மடத்துார், சதுரப்பாளையத்தில் தீப்-பாஞ்சம்மன் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகத்தை முன்-னிட்டு நேற்று காலை, 8:30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் இடைப்பாடி அருகே கல்வடங்கம் ஆற்றில் புனித நீராடினர். பின் குடத்தில் புனித நீரை நிரப்பி சந்தனம், குங்குமம் இட்டு பூமாலை சூடினர். தொடர்ந்து பூசாரி பூஜை செய்ததும், 4 சக்கர வாகனங்களில் மடத்துார் வந்தனர். அங்கிருந்து காலை, 11:30 மணிக்கு, பசு, காளை, குதிரைகள் முன்புறம் செல்ல, தீர்த்தக்கு-டங்களை சுமந்தபடி, பக்தர்கள் கோவிலை அடைந்தனர். நாளை காலை, 9:45 மணிக்கு மேல், 10:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை