உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / த.மா.கா., கையெழுத்து இயக்கம்

த.மா.கா., கையெழுத்து இயக்கம்

சேலம் : த.மா.கா.,வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வல-சையூரில் நேற்று நடந்தது. அதில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன. இதற்கு தலைமை வகித்த, மாவட்ட தலைவர் செல்வம் கூறுகையில், 'தி.மு.க., அரசு, 3ம் முறை உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை வாபஸ் பெற கட்சியினர், மக்களிடம் கையெ-ழுத்து பெற்றுள்ளோம். அதை கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்,'' என்றார். மாநில இணை செயலர் சின்னதுரை, மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலர் நல்லதம்பி, செயலர் முனுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி