உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதலர் தினம் கொண்டாட்டம் பூங்காக்களில் ஜோடிகள் குதூகலம்

காதலர் தினம் கொண்டாட்டம் பூங்காக்களில் ஜோடிகள் குதூகலம்

சேலம்: உலகம் முழுதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஏராளமானோர், காதலை வெளிப்படுத்திக்கொள்ள, இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி, சில நாட்களுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தனர். இருப்பினும் சில ஆண்டுகளை ஒப்பிடுகையில், பொது இடங்களில் கூடும் காதலர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.சட்டம் ஒழுங்கு பிரச்னை, போலீஸ் கண்காணிப்பு ஆகியவற்றால், வீட்டுக்கு தெரியாமல் உலா வந்த ஜோடிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக சேலம் மாநகரில் அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காக்களில், சில ஜோடிகள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். காதலித்து திருமணம் செய்த தம்பதியரும், அங்கு வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். 'ஷாப்பிங் மால்', சினிமா தியேட்டர்களுக்கு சென்று, ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடினர். பலர், முகத்தை மூடியபடியும், முக கவசம் அணிந்தபடியும் வாகனங்களில், 'உலா' வந்தனர். ரோஜாப்பூ, சாக்லெட், பரிசு பொருட்கள் என, காதலர் தின பொருட்களின் விற்பனையும் களைகட்டியது.ஏற்காடுகாதலர் தினமான நேற்று ஏற்காட்டுக்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக காதல் ஜோடிகளும் பெரிய அளவில் தென்படவில்லை. இதனால் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் சில ஜோடிகள் மட்டும் உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை