உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சி கூட்டம் நடத்த வழிமுறை என்ன?

கட்சி கூட்டம் நடத்த வழிமுறை என்ன?

சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்தி, வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரங்கள் மேற்கொள்வர். இதற்கு கூட்டங்கள் நடத்தும்போது, பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அமைதி ஒழுங்கை நிலைநாட்டவும் வசதியாக, கூட்டங்கள் நடக்கும் இடம், நேரம் குறித்த தகவல்களை, கட்சியோ, வேட்பாளரோ போலீஸ் துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இடம் குறித்து தேர்வு செய்யும் முன், குறிப்பிட்ட இடத்தில் தடை உத்தரவோ, கட்டுப்பாடு உத்தரவோ நடைமுறையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தடை ஆணைகள் நடைமுறையில் இருந்தால், தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.தடை ஆணைகளின் மீது விலக்கு பெற விரும்பினால் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முன்கூட்டியே விண்ணப்பித்து விலக்கு பெற்றிருக்க வேண்டும். ஒலிபெருக்கி முதலிய கருவிகளை பயன்படுத்துவதற்கு அனுமதியோ, உரிமமோ பெற வேண்டியிருப்பின் முன்கூட்டியே விண்ணப்பித்து உரிமம், அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.கூட்டத்தின்போது இடையூறு செய்வோரையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரையும் சமாளிப்பதற்கு பணியில் இருக்கும் போலீஸ் துறை உதவியை, கூட்ட ஏற்பாட்டாளர்கள் நாடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை