| ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : சேலம் உணவு பொருட்கள் வழங்கல் பிரிவு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு, பொன்னம்மாபேட்டை, அண்ணா நகர் வாட்டர் டேங்க் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள குடோனில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. அதிகாரிகளை பார்த்ததும், லாரி டிரைவர் உள்பட அனைவரும் ஓடிவிட்டனர்.ஆனால் ரேஷன் அரிசியை மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கிய அதே பகுதியை சேர்ந்த ரவி மனைவி ரேவதி, 43, என்பவரை மட்டும் அதிகாரிகள் பிடித்தனர். விசாரணையில், கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. பெண்ணையும், லாரியுடன், 7 டன் அரிசியையும், சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேவதியை கைது செய்து அரிசி, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர், டிரைவரை, போலீசார் தேடுகின்றனர்.