உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலி

கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலி

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம், 55. சேலம் ரயில்வே கூட்ஸ்ஷெட்டில் சுமை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று பணி முடிந்து, மாலை, 6:10 மணிக்கு, 'சைன்' பைக்கில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார்.ஓமலுாரில் அண்ணமார் ஓட்டல் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், சுந்தரம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவரை, ஓமலுார் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை