உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி பேரூராட்சியில் ரூ.7.52 லட்சத்தில் வளர்ச்சி பணி

இளையான்குடி பேரூராட்சியில் ரூ.7.52 லட்சத்தில் வளர்ச்சி பணி

இளையான்குடி:இளையான்குடி பேரூராட்சியில் ரூ. 7.52 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார்.இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதமரின் பல்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 7.52 லட்சம் செலவில் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பகைவரை வென்றான், பூச்சியேந்தல்,சோதுகுடி,கீழாயூர் உள்ளிட்ட இடங்களில் புதிதாக அங்கன்வாடி மையங்களை கட்டுதல் மற்றும் மராமத்து செய்தல், இளையான்குடியில் பயன்பாடு இல்லாமல் உள்ள பழைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இடித்து விட்டு புதிய துணை சுகாதார நிலையம் செயல்படுவதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி பெறுவது, இளையான்குடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு பொது ஏலம் நடத்துவது, பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை,பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை