உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பைபாஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்க உடன்பாடு

பைபாஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்க உடன்பாடு

மானாமதுரை, : மானாமதுரை பைபாஸ் ஸ்டாப்பில் மதுரை - ராமேஸ்வரம் பஸ்கள் நின்று செல்ல வேண்டுமென்று பல்வேறு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தனர்.பஸ்கள் நிற்காமல் சென்றதை தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இக்கூட்டத்தில் சோமசுந்தரபாரதி, நகராட்சி கவுன்சிலர் புருசோத்தமன் ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், கிளைச் செயலாளர் ராசேந்திரன், நிர்வாகிகள் தேவதாஸ், ஆண்டி, பரமாத்மா, முருகானந்தம், அரசு போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை