உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு 

நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு 

சிவகங்கை : கூட்டுறவுத்துறையின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 32 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகை அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டு வருகின்றன.2024 ஏப்., முதல் 2025 மார்ச் வரை அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நகை கடன் வழங்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நகை அடமான கடன் வழங்க ரூ.490 கோடி, பயிர் கடன் வழங்க ரூ.200 கோடி, கால்நடை வளர்ப்பு கடன் வழங்க ரூ.75 கோடி என அரசு சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.1,165 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த கடன்களை உரிய ஆதாரங்களை பெற்று, வங்கி கிளை மேலாளர், செயலர்கள் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ