உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அன்னவாசலில் ஆடி அமாவாசை வழிபாடு

அன்னவாசலில் ஆடி அமாவாசை வழிபாடு

மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னவாசல் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இக்கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட நவ திரவிய அபிேஷகம் செய்தனர். உற்ஸவருக்கு அலங்காரம் செய்து, கோயில்முன் மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள், கிராமத்தினர் செய்திருந்தனர்.இளையான்குடி: குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி, சிவலிங்கம் மீது காசி தீர்த்தம் ஊற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி