உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழைய வீடியோ பரவுகிறது சிவகங்கை கார்த்தி பேட்டி

பழைய வீடியோ பரவுகிறது சிவகங்கை கார்த்தி பேட்டி

காரைக்குடி:பா.ஜ.,வை ஆதரித்தால் புனிதர்கள் எதிர்த்தால் குற்றவாளிகள் என்ற மனப்பான்மையில் மத்திய அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர் என சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்தி எம்.பி., தெரிவித்தார். காரைக்குடியில் அழகப்பர் 115 ஆவது நிறுவனர் நாள் கொண்டாடப்பட்டது, இதில், கார்த்தி எம்.பி.,மாலை அணிவித்து மரியாதை செய்தார்.அவர் கூறியதாவது:மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு மாற்று பாதையில் செல்ல காங்., கட்சி தேர்தல் அறிக்கை வழி காட்டியுள்ளது.பா.ஜ.,வை ஆதரித்தால் புனிதர்கள். எதிர்த்தால் குற்றவாளிகள் என்ற மனப்பான்மையில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஒரு தலை பட்சமாக செயல்படும் அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். பிரசாரத்தின் போது மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. நான் செய்த பணிகளை பட்டியலிட்டு புத்தகம் கொடுத்துள்ளேன். தற்போது எனக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் வீடியோ 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த நிகழ்வு. அதை தற்போது எனக்கு எதிராக பரப்பி வருகின்றனர். தற்போது அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை